Saturday, December 26, 2009


அவள் என்னை

பிரிந்து விட்டாள்

என்பது எனக்கு தெரியும்

பாவம்!

என் இதயத்துக்கு தெரியாது

அது உனக்காக இன்னும்

துடித்து கொண்டு இருக்கிறது என்று
.....
முள்ளிலாத மலர்களை தூவுங்கள்
என் சாவு ஊர்வலத்திற்கு
வந்தாலும் வருவாள் என் காதலி பாவம் அவளின் பாதங்கள்

Wednesday, December 16, 2009

வதைக்கும் உன் ஞாபகங்களை


சதா உன் ஞாபகங்கள்

மனதுக்குள் மழை பெய்து கொண்டிருக்கிறது

சமயங்களில் தடுமாறி கண்களில் வழிகிறது

என் எராளமான ஆசைகள்

உன் இமை சிறகடிப்பில்

தொங்கிக்கொண்டு இருக்கிறது

வதைக்கும் உன் ஞாபகங்களை

சுமந்து கொண்டு சாகவும் முடியாது

எல்லவாற்றையும் கொட்டி விடுவேன்

நீண்ட ஒரு பாதையில்

நீ நடந்து வருவாய்

உன்னோடு கூட மாலையோடு ஒருத்தி

உன் கழுத்திலும் மாலை

கண்ணீர் வழிய நிற்கிறேன்

அருகில் நீ கடக்கயில் தலை குனிந்து கொள்கிறேன்

அது தவிற என்ன செய்ய இயலும் .........................

ஊமையாய் நான் .......................

என் கனவாய் நீ........................


அன்புடன்
சதீஷ்குமார்

ஆனால் நீ........


நீ என்னை கடக்கும் போதெல்லாம்
உன் கொலுசு கூட என் மீது இரக்கப்பட்டு
சில வார்த்தைகளை சிணுங்கி போகிறது
ஆனால் நீ........

வண்ணத்துப் பூச்சி ...


ஒரு
வண்ணத்துப் பூச்சி
உன்னை காட்டி கேட்கிறது
என் இந்த பூ நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!....

Wednesday, December 2, 2009

காணும் காட்சிகளெல்லாம்கானல் நீர்க் காட்சிகளாய்கண்களுக்கு மாயம் காட்டிச்செல்கின்றனஉன் நினைவுகளில் சிக்கித்தவிக்கும் தருணங்களில்!நினைவுகள் நிஜங்களாக வேண்டிநிஜங்களில் ஒரு நினைவுப் போராட்டம்…என்னை கடந்து செல்கையில், என் கிறுக்கல்களையும் கொஞ்சம் வாசித்துச் செல்லுங்கள்... வரிகள் பிடித்திருப்பின், உங்கள் எண்ணங்களை விதைத்துச் செல்லுங்கள்...
அன்பே நானும் நீயும் சுற்றி திரிந்த காடுகளில் இன்னமும் அலை பாய்கிறது நம் நினைவுகள் பரிசுத்த ஆவியாய்
நானும் என் கவியும் .....

என் கிறுக்கல்கள் எல்லாம்
என் கனவில் மட்டும்
நெருக்கத்தில் வரும்
காதல் தேவதையை பற்றிய
கவிதை நாட்குறிப்பு............
என்றும் அன்புடன் ...
satheesh

குளம் நிறையக் கோலங்கள்
கல் எறிந்தவனின்
கைவண்ணம்...



உன் நினைவுகளைத் தேடிப்
பயணிக்கிறது என் நெஞ்சம்…
காரிருள் மெளனத்தைச்
சுமந்த கருவேலங்காட்டின் அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய
சன்ன வெயிலாய்…



மேகங்களைத் தொட்டுவிட்ட
மலையின் மேனியைத்தொட்டு
பூத்துச் சிரிக்கும் மலர்களின்
புன்னகையை வருடிவந்து
சலசலக்கும் நீரோடையாய்…


ஆள் அரவமற்ற கானகத்தில்
அடர்ந்து படர்ந்து
பாரியிடம் தேர் பெற்ற
முல்லைக் கொடியில் முகிழ்த்த
முதல் பூவாய்…


என்றும் சுகமாயும் சுகந்தமாயும்
உணர்கிறேன் உன் நினைவுகளை… - நீயும்
கவர்கிறாய் என் கனவுகளை….