Saturday, December 26, 2009


அவள் என்னை

பிரிந்து விட்டாள்

என்பது எனக்கு தெரியும்

பாவம்!

என் இதயத்துக்கு தெரியாது

அது உனக்காக இன்னும்

துடித்து கொண்டு இருக்கிறது என்று
.....
முள்ளிலாத மலர்களை தூவுங்கள்
என் சாவு ஊர்வலத்திற்கு
வந்தாலும் வருவாள் என் காதலி பாவம் அவளின் பாதங்கள்

Wednesday, December 16, 2009

வதைக்கும் உன் ஞாபகங்களை


சதா உன் ஞாபகங்கள்

மனதுக்குள் மழை பெய்து கொண்டிருக்கிறது

சமயங்களில் தடுமாறி கண்களில் வழிகிறது

என் எராளமான ஆசைகள்

உன் இமை சிறகடிப்பில்

தொங்கிக்கொண்டு இருக்கிறது

வதைக்கும் உன் ஞாபகங்களை

சுமந்து கொண்டு சாகவும் முடியாது

எல்லவாற்றையும் கொட்டி விடுவேன்

நீண்ட ஒரு பாதையில்

நீ நடந்து வருவாய்

உன்னோடு கூட மாலையோடு ஒருத்தி

உன் கழுத்திலும் மாலை

கண்ணீர் வழிய நிற்கிறேன்

அருகில் நீ கடக்கயில் தலை குனிந்து கொள்கிறேன்

அது தவிற என்ன செய்ய இயலும் .........................

ஊமையாய் நான் .......................

என் கனவாய் நீ........................


அன்புடன்
சதீஷ்குமார்

ஆனால் நீ........


நீ என்னை கடக்கும் போதெல்லாம்
உன் கொலுசு கூட என் மீது இரக்கப்பட்டு
சில வார்த்தைகளை சிணுங்கி போகிறது
ஆனால் நீ........

வண்ணத்துப் பூச்சி ...


ஒரு
வண்ணத்துப் பூச்சி
உன்னை காட்டி கேட்கிறது
என் இந்த பூ நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!....